இந்தியாவிற்கு நிச்சயம் அமெரிக்கா உதவும்... அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்வதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-01 06:13 GMT
இந்தியாவிற்கு நிச்சயம் அமெரிக்கா உதவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்வதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், இதனை பெரும் துயரமாக கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஒஹியோ மாகாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். கொரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் இந்திய மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக மே 4 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா திரும்பும் அமெரிக்கர் அல்லாத பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அறிவிப்பு பிறகு இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் பேசவில்லை என்று அவர் பேட்டியின் போது தெரிவித்தார்.
 
Tags:    

மேலும் செய்திகள்