கொலம்பியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்; பாதிப்பு எண்ணிக்கை 27,20,000-ஐத் தாண்டியது

கொலம்பியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Update: 2021-04-24 11:43 GMT
கொலம்பியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அந்நாட்டு அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 430 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்ரின் 3வது அலையானது அதிவேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பி வழிகின்றன. கொலம்பியாவில், 20 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகாமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 70 ஆயிரத்து 26 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழ்ந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் 37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்