இங்கிலாந்து : பொறுப்புகளை துறப்பதாக இளவரசர் ஹாரி அறிவிப்பு
இளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தங்களது ராஜாங்க பொறுப்புகளை துறந்து வெளிநாட்டில் வாழ இருப்பதாக இளவரசர் ஹாரியும், மேகானும் அறிவித்தனர். இதனையடுத்து, இளவரசர் ஹாரியுடன் எலிசபெத் ராணி, இளவரசர் சார்லஸ், வில்லியம்ஸ் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொறுப்புகளை துறக்கும் முடிவை கைவிடக்கோரி ராணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை, இளவரசர் ஹாரி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.