இலங்கை அதிபர் வேட்பாளராக சிவாஜிலிங்கம் மனு தாக்கல்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட சிவாஜிலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்

Update: 2019-10-07 10:07 GMT
டெலோ கட்சியின் உறுப்பினரான சிவாஜி லிங்கம் இலங்கை தேர்தல் ஆணையத்தில் அதிபர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கான டெபாசிட் தொகையை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதர் செலுத்தினார். சிவாஜிலிங்கம் ஏற்கனவே  2 ஆயிரத்து 10 ஆம் ஆண்டு  ஒரு முறை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  எதிர்ப்பை பதிவு செய்யவே  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் 41 பேர் போட்டியிடுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா உறுதியாக போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்