நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2018-11-13 18:21 GMT
அடுத்தடுத்த திருப்பங்களும், உச்சகட்ட குழப்பமும் நீடித்து வரும் இலங்கையில்,நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் உள்பட மொத்தம் 15 தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

2 - வது நாளாக நீடித்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், நாடாளுமன்றம் கலைப்புக்கு நீதிபதி, இடைக்கால தடை விதித்தார்.   

வருகிற டிசம்பர் 7 ம் தேதி வரை, இடைக்கால தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் , ஜனவரி 5 ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நாளை, புதன்கிழமை  காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை : "நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி" - ரணில்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு ரணில் விக்ரமசிங்க வரவேற்பு தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உச்சநீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து வரும் 19 ந்தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ராஜபக்சே அணியினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்