கடலிலும் காய்கறி சாகுபடி செய்யலாம் : பல்கலை. மாணவியின் 'மிதக்கும் பண்ணை'
கடலிலும் காய்கறி சாகுபடி செய்யலாம் என, இங்கிலாந்து மாணவி ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
கடலிலும் காய்கறி சாகுபடி செய்யலாம் என, இங்கிலாந்து மாணவி ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. வெப்ப மயமாதலால், கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. இவை இரண்டிற்கும் தீர்வு காணும் முயற்சியாக, மிதக்கும் பண்ணை என்ற விவசாய முறையை இந்த மாணவி கண்டறிந்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள SUSSEX பல்கலைக் கழக மாணவி, LEILAH CLARKE என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார். கடல் நீரில் விடப்படும் இந்த மிதவைகளில், கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம். இந்த திட்டத்திற்கு நிதி கிடைத்தால், அதிகமான பலன்களைப் பெறலாம் என, இந்த மாணவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.