புதைக்கப்பட்ட சாமியாரின் உடலை -தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை -பகீர் காரணம்

Update: 2024-06-16 08:29 GMT

வேலூர் அருகே வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், ரவி என்பவர் சாமியாராக வசித்து வந்துள்ளார். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்ததாகவும், இதனால் சமூக விரோதிகள் ரவியை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ் மற்றும் பிரபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில், ரவியின் உடலை தோண்டியெடுத்து உடற்கூராய்வு நடத்திய பின்பு மீண்டும் புதைக்கப்பட்டது. 4 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள திருமலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்