பிரமாண்டமாக திறக்கப்பட்ட வசந்த் & கோ-வின் 122-வது கிளை | Vasanth & Co | Salem | Thanthi TV

Update: 2024-10-27 17:29 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடியில், வசந்த் அண்ட் கோ-வின் 122வது கிளையை, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 122-வது கிளை, எடப்பாடியில் தொடங்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்