வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மதுரை மாநகரின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசன தேவைக்காக, வைகை அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரும் 14ம் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதத்தில், இந்த தண்ணீரானது திறந்துவிடப்படவுள்ளது. இதன் காரணமாகவும், மதுரை மற்றும் தேனியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும், யானைக்கல் அருகே உள்ள தரைப்பாலம் ஆற்று நீரால் மூழ்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.