நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்..காலையில் ரேஷன் கடையில் கண்ட காட்சி.. ஆடிப்போன மக்கள், அதிகாரிகள்

Update: 2024-08-02 06:40 GMT

உளுந்தூர்பேட்டை அருகே ஏ.சாத்தனூர் கிராமத்தில் உள்ள ரேசன் கடையின்  பூட்டை நள்ளிரவில் உடைத்த மர்ம நபர்கள், அங்கு இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதில் இருந்த அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகளும் பாமாயில் பெட்டிகளும் திருடப்பட்டு கடை வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்