டூ - வீலருக்கு ஸ்கெட்ச் போட்ட கேடி... தலை தெறிக்க ஓடிய லேடிகள் - கொத்தாக தூக்கிய போலீஸ்

Update: 2023-08-15 12:28 GMT

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், கள்ளச்சாவியை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்களை திருட முயன்ற 2 பெண்களை போலீசார் கைதனர்.

எம்ஜிஆர் நகர் வளையாபதி தெருவில் சுப்ரமணியம் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை 2 பெண்கள் கள்ளச்சாவி போட்டு எடுக்க முயன்றனர்.

மாடியில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்ததால், 2 பெண்களும் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து சுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, நித்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்