தவெக கொடியில் வெடித்த சர்ச்சை... கிளம்பிய புதிய பூகம்பம் - விஜய்க்கு அடுத்த தலைவலி

Update: 2024-08-25 02:32 GMT

தங்களது கொடியை போலவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி உள்ளதாக வீர சோழ பறையர் நல சங்க தலைவர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2015ல் இந்த கொடியை தாங்கள் அறிமுகம் செய்ததாகவும், அதன் பிறகு வெள்ளாளர் முன்னேற்றக் கழகமும், தற்போது விஜய்யும் இதேபோன்று கொடியை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து பயணிக்க தயார் எனவும் பாஸ்கரன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்