விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடிந்த நிலையில், மாநாட்டு திடலை பார்க்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். மாநாட்டில் விஜயை பார்க்க முடியாத தாங்கள், அவர் பேசிய மேடையை பார்த்து செல்லலாம் என்று வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், 100 அடி உயர கொடிக்கம்பம் முன்பு ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.