தகாத உறவில் இருந்து வந்த பெண் திடீரென பேச மறுத்ததால், அவரை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூரை சேர்ந்தவர் சுமதி. திருமணமான இவர், திருச்சியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கணவரின் சகோதரர் நண்பனான மாரிமுத்து என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் சுமதியை கண்டித்த நிலையில், அவர் மாரிமுத்துவிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து சிறுகாம்பூரி பேருந்து நிலையத்தில் வைத்து சுமதியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேருந்து நிலையமே பரபரப்புக்குள்ளான நிலையில், மாரிமுத்துவை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த மாரிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வரும் நிலையில்,கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.