திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பரபரப்பு புகார் | Trichy

Update: 2024-02-22 09:00 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் சொத்துக்களை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜீயர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6 வது ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்,

மடத்தின் பெயரில் சிறிய மாற்றம் செய்து புதிதாக டிரஸ்ட் தொடங்கி உள்ள சிலர், மடத்திற்கு சொந்தமான இடங்களை பத்திரப்பதிவு செய்து கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், சிலர், மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மோசடி நபர்கள் மீது காவல்துறை தரப்பில் முறையான வழக்குகள் பதிவு செய்து 60 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டு தருவதுடன், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்