ரெண்டாக பிரிந்து செல்லும் காவிரி.. பிரம்மிக்க வைக்கும் கழுகு பார்வை காட்சி
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்பொழுது ஒரு
லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது. காவிரியில் 43 ஆயிரம் கனஅடியும்,
கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி
தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கொம்பு
மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில்
இரு கரைகளும் தொட்டபடி நீர் சென்று கொண்டிருப்பதால்
கடல் போல் காட்சி அளிக்கிறது. காவிரி மற்றும் கொள்ளிடம்
ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு
வருகிறது.