சிக்கி இருக்கும் அங்கித் திவாரி - ED எடுத்த அதிரடி முடிவு | supreme court

Update: 2024-01-18 06:39 GMT

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், மதுரை பிரிவு அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அங்கித் திவாரிக்கு வருகிற 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கேட்டு கடந்த 12 ஆம் தேதி திண்டுக்கல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில், தங்களையும் சேர்க்க வேண்டுமென திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும் மனு தாக்கல் செய்த நிலையில், இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து, சிறையில் இருக்கும் அங்கிட் திவாரியிடம் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்