ரயிலை கவிழ்க்க பெரும் சதி.. இரவில் அதை பார்த்து அதிர்ந்த பைலட் நாட்டை பரபரப்பாக்கிய அடுத்த அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், அடையாளம் தெரியாத நபர்கள், தண்டவாளத்தில் தலா 70 கிலோ எடையுள்ள இரண்டு சிமெண்ட் கற்களை வைத்து சரக்கு ரயிலை தடம் புரளச் செய்ய முயன்றனர். சிமெண்ட் கற்கள் மீது மோதிய போதிலும், ரயில் எந்த சேதமும் இன்றி பயணத்தை தொடர்ந்தது. ஞாயிறு இரவு 10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து ரயில்வே ஊழியர்கள் புகார் அளித்ததையடுத்து, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதே
போல் உத்தர பிரதேசத்தில் கான்பூர் அருகே சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் சிலிண்டர் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.