பாத்ரூமில் அறுந்து தொங்கிய வயர்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம் - திண்டுக்கல்லில் பயங்கரம்
திண்டுக்கல்லை சேர்ந்த ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி, திருப்பூர் மாவட்டம் செரங்காடு மாநகராட்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பள்ளியின் கழிவறைக்கு சென்றபோது, அறுந்து தொங்கிய வயரில் மின்சாரம் தாக்கியதால் ஜோஸ்லின் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவியின் காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியின் சிகிச்சைக்கு உதவுமாறு, தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.