கழிவறையில் பீங்கான் துளையில் கால் சிக்கி பரிதவித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மயிலாப்பூரில் 4 வயது சிறுவன் வீட்டின் கழிவறைக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து கழிவறையின் பீங்கான் துளைக்குள் கால் சிக்கியது. பெற்றோர் சிறுவனை மீட்க முயன்றும் முடியாததால், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 4 மணி நேரம் போராடி சிறுவனை பத்திரமாக மீட்டனர்.