இன்றைய தலைப்பு செய்திகள் (13-10-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-13 16:04 GMT
  • காசா மக்களுக்கு எச்சரிக்கை
  • 7வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்..
  • வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் ராணுவம்....
  • உடனடியாக அனைத்து பாலஸ்தீனியர்களும் வெளியேற இன்று எச்சரிக்கை...
  • 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்
  • இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்...
  • மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இடம் மாற்றம் செய்ய முடியாது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்...
  • இஸ்ரேல் போர் - ஆலோசனை
  • பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு...
  • போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிற இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செய்யவும் திட்டம்...
  • போரை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் இன்று வேண்டுகோள்..
  • ''மோதல்கள் யாருக்கும் பயனளிக்காது''
  • மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது
  • டெல்லியில் நடைபெற்ற ஜி20 சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேச்சு....
  • ஆப்ரேசன் அஜய்' மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் இன்று தாயகம் திரும்பினர்...
  • மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வருகை...
  • திமுக மகளிர் உரிமை மாநாடு
  • நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சென்னை வருவதால் தீவிர பாதுகாப்பு
  • 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு
  • தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்...
  • காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு
  • ஒரே நாளில் ரூ.20 லட்சம் அபராதம்
  • சென்னையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 4 ஆயிரத்து 400 பேர் பிடிப்பட்டனர்...
  • இன்று ஒரே நாளில் 20 லட்சம் ரூபாய் அபாரதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல்...
Tags:    

மேலும் செய்திகள்