பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், 15 சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... வரும் 25ஆம் தேதிக்குள் தமிழக அரசு தங்களின் கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், இல்லை என்றால் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கணேசன் எச்சரித்துள்ளார்.