விவசாயிகள்- போலீசார் இடையே வாக்குவாதம்... எல்லை மீறிய முற்றுகை போராட்டம் | TN Police | Farmers

Update: 2024-08-12 13:42 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போது உரிய இழப்பீடு வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும், இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், போலீசாருக்கும் விவசாய சங்கத்தினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்