ரூ.4,035.65 கோடியில் கான்கிரீட் கூரைகள் - தமிழக அரசு பெருமிதம்

Update: 2024-05-28 11:26 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 208 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 ஆயிரத்து 606 சாலைப் பணிகள் ஆயிரத்து 884 கோடி ரூபாய்

மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளதாகவும்,ஊரக வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 7.5.2021 முதல் 14.02.2024 வரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு மொத்தமாக 4 ஆயிரத்து 35 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் கிராமப் புறங்களின் 63 லட்சத்து 63 ஆயிரத்து 379 வீடுகளுக்கு 2 ஆயிரத்து 10 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக 71 ஆயிரத்து 960 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அளவில் 4 கோடி செலவில் 511 வேலைவாய்ப்பு முகாம்கள், இளைஞர் திறன் விழாக்கள் நடத்தப்பட்டு 92 ஆயிரத்து 3 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்