ஈழ-தமிழ் மாணவர்கள் வாழ்வில்`கலங்கரை' ஒளி... தமிழகம் முழுவதும்... அசத்தல் ஏற்பாடு...
தமிழகத்தில் பயிலும் இலங்கை தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 57 ஆயிரத்து 772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில், 2023-24 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2 ஆயிரத்து 256 மாணவ, மாணவியர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி
புதன் அன்று நடத்தப்பட்டது. இதை அயலகத் தமிழர் நலன் துறை மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் துறை ஒருங்கிணைந்து நடத்தின. இதில் மாவட்ட வழிகாட்டு அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்துறை அறிஞர்கள் எதிர்கால வழிகாட்டுதல் தொடர்பாக சிறப்புரையாற்றினர்.