புதிய வனக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு
திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு வனக் கொள்கை 2024ஐ
உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைக்க தமிழ்நாடு
அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை அதிகாரிகள், தன்னார்வ
தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை கொண்டு
இந்த குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வரைவு கொள்கையை தயார் செய்ய உள்ளனர்.