தீபாவளி சீட்டு பணத்தை கேட்டவர்களுக்கு வந்த மிரட்டல்.. - தி.மலையை அதிர வைத்த அண்ணன், தம்பி..

Update: 2024-07-11 06:58 GMT

திருவண்ணாமலையில், தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலையை அடுத்த வெரையூரைச் சேர்ந்த கபில்குமார், அவரது தம்பி பாலாஜி, தந்தை மணி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்கள் தீபாவளி சீட்டு, மாத ஏலச்சீட்டு, அதிக வட்டி தருவதாக கூறி வசூல் என பல்வேறு வழிகளில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உரிய காலத்தில் பணத்தை திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பல கோடி ரூபாயை வசூலித்து விட்டு, திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணத்தை கேட்டால் ஆள் வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.


Tags:    

மேலும் செய்திகள்