தெரியாமல் தள்ளிவிட்டதில் பலி..வீட்டுக்கு காப்போடு வந்த போலீஸ்

Update: 2024-02-13 08:31 GMT

திருவண்ணாமலையில், கீழே தள்ளிவிடப்பட்ட நபர் பலியானதால், ஜவுளிக்கடை தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.ஆரணி டவுன் பகுதியில், தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பவர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பார்த்திபன். ராஜமாணிக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு வேலை போனதற்கு உடன் வேலை பார்க்கும் பார்த்திபன் தான் காரணம் என ராஜமாணிக்கம் கருதியுள்ளார். இதனால் சாலையில் தனியே நடந்து சென்று கொண்டிருந்த பார்த்திபனை, மதுபோதையில் ராஜமாணிக்கம் வம்புக்கு இழுத்துள்ளார். அப்போது, ராஜமாணிக்கத்தை பார்த்திபன் தள்ளிவிட்டு விட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டார். கீழே விழுந்த ராஜமாணிக்கத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மேல் சிகிச்சையின்போது உயிரிழந்தார். இதனையடுத்து பார்த்திபன் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்