"இந்த ஜாதியில், இந்த நாளில்தான் பிறந்தேன் என வள்ளுவர் கூறவில்லை" - ஐகோர்ட் நீதிபதி அதிரடி

Update: 2024-08-29 07:31 GMT

இந்த ஜாதியில், இந்த நாளில்தான் பிறந்தேன் என வள்ளுவர் கூறவில்லை" - ஐகோர்ட் நீதிபதி அதிரடி

வைகாசி மாதம் அனுசம் நட்சத்திர நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திருவள்ளுவர் தினம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுவர் திருநாள் கழக தலைவர் சாமி தியாகராஜன் வழக்கு தொடர்ந்தார். அரசாணையில் தை மாதம் இரண்டாம் தேதி திருவள்ளுவர் பிறந்த தினம் என்று குறிப்பிடவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த ஜாதியில், இந்த நாளில்தான் பிறந்தேன் என திருவள்ளுவர் எங்கும் குறிப்பிடாத போது, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென எப்படி கேட்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். திருவள்ளுவர் தினத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் கொண்டாடப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்