திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.