தந்தையையே கொடூரமாக தாக்கிய மகன், தாய்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்
தந்தையையே கொடூரமாக தாக்கிய மகன், தாய்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் அடுத்த புதுப்புங்குளம் பகுதியை சேர்ந்த காந்தி- கலைசெல்வி தம்பதி, தனது மகன் ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர். இவர்களது நிலத்தில் பட்டன்ரோஸ் பூ பயிரிட்டுள்ளதுடன், தினமும் காலையில் பூக்களை பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கலைச்செல்வி தனது கணவர் காந்தியை பூப்பறிக்க செல்லுமாறு கூறியுள்ளார். மழை பெய்து கொண்டிருப்பதால் அவர் செல்ல மறுத்ததுடன், மழை நின்ற பிறகு செல்வதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த ராஜீவ்காந்தியும் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தாய், மகன் இருவரும் சேர்ந்து காந்தியை மண்வெட்டியால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.