திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் செய்த அவருக்கு, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆந்திராவில் ஆட்சி அமைப்போருடன் இணைந்து இரு மாநில வளர்ச்சிக்கு செயல்படுவோம் எனக் கூறினார்.