தரமற்ற சாலை?.. தட்டி கேட்ட இளைஞர்கள்.. லாக் அப்பில் தள்ளிய காண்ட்ராக்டர்

Update: 2024-08-20 15:17 GMT

மாடப்பள்ளி அடுத்த கோனேரி குப்பம் கிராமத்தில் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலையின் தரம் சரியில்லை என்று இளைஞர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, தார்சாலையை இளைஞர்கள் பெயர்த்து எடுத்ததாக கூறி காவல்துறையில் ஒப்பந்ததாரர்கள்புகார் அளித்தனால். இதனால், மூன்று இளைஞர்கள் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில், புதிதாக போடப்பட்ட தார்சாலையில், இரண்டு மாதங்களிலேயே பள்ளம் விழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அப்பகுதி இளைஞர்கள், தரமற்ற சாலையை போட்ட காண்ட்ராக்டர், பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்