மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் நெய்பயிரைவிட களைச்செடிகள் அதிகமாக வளர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தரமற்ற விதைநெல் வழங்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். சன்னரகமான மஹிந்திரா என்ற விதையை விநியோகம் செய்த தனியார் விற்பணை நிலையங்கள் மீதும் தரமற்ற விதைகளுக்கு தரச்சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.