கனமழை காரணமாக சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், கான்சாஹிப் வாய்க்காலில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதாலும் மழைநீர் வடிய வழி இல்லாததே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.