``அத்துமீறிய மாமனார்; அட்ஜஸ் செய்ய சொன்ன கணவன்... கட்டாய கருக்கலைப்பு..''
தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கவிராமுக்கு திவ்யதர்ஷினி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வரதட்சணையாக 80 சவரன் நகை, ரூ 10 லட்சம் ரொக்கம் ஆகியவை கவிராமிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.திருமணமான சில மாதங்களிலேயே கவிராமின் தந்தை பொன்ராஜ் திவ்யதர்ஷினியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.இதனை கவிராமிடம் தெரிவித்த போது அவர் அட்ஜஸ் செய்து கொள் எனக் கூறியதாக திவ்யதர்ஷினி தெரிவித்தார். மேலும் திவ்யதர்ஷினி கருவுற்றிருந்த நேரத்தில் கவிராமின் குடும்பத்தினர் இஞ்சி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து கருவை வலுகட்டகாயமாக கலைத்தாகவும் திவ்யதர்ஷினி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக திவ்யதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில் பொன்ராஜ், கவிராம் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக திவ்யதர்ஷினி குற்றம்சாட்டினார்.