ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் கூலித்தொழிலாளி ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழபுளியங்காய் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. விவசாய கூலி தொழிலாளியான இவர் வெள்ளூர் மார்த்தாண்டநகரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாய வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த காளிமுத்துவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது. சுதாரித்து கொண்ட அவர் முள் வேலியை தாண்டி தப்பி ஓட முயன்றுள்ளார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் விரட்டி சென்று அவரை வெட்டி படுகொலை செய்துள்ளது. தகவலறிந்து சென்ற ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.