"என் பையனே போயிட்டான்.." - "இருக்குறவங்கள காப்பாத்துங்க சார்.." - பரிதாபமாய் இறந்த 8 மாத குழந்தை...
"என் பையனே போயிட்டான்.." - "இருக்குறவங்கள காப்பாத்துங்க சார்.." - விபத்தில் பரிதாபமாய் இறந்த 8 மாத குழந்தை... நெஞ்சை உலுக்கும் தந்தையின் கதறல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பக்தர்கள் சென்ற வேனின் பின் பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 20 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் இருந்து
புதுச்சேரி பிரித்தியங்கா தேவி அம்மன் கோயிலுக்கு டூரிஸ் வேனில் சென்றனர். ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலை விண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் வேனின் பின் பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன், அமுதவள்ளி தம்பதியின் யேமேஷ்வரன் என்ற 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. படுகாயமடைந்த 20 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், 5வயது சிறுவன் நவின்குமார் மற்றும் 5 பெண்களுக்கு கை கால் மற்றும் முதுகு தண்டு முறிவு ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆரணி அருகே நடந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லையென உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.