இரவில் வடமாநில தொழிலாளியிடம் போலீஸ் செய்த கேவலமான காரியம் - கைதியாகி புழல் சிறையில் அடைப்பு
இரவில் வடமாநில தொழிலாளியிடம் போலீஸ் செய்த கேவலமான காரியம் - கைதியாகி புழல் சிறையில் அடைப்பு
திருப்போரூர் அருகே, வடமாநிலத் தொழிலாளியிடம், ஆயிரம் ரூபாய் பறித்ததாக எழுந்த புகாரில், காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருப்போரூர் அருகே மானாமதி காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர் அஜித்குமார், இரவு ரோந்து பணியின்போது,
குன்னப்பட்டு பகுதியில் வடமாநிலத் தொழிலாளி ஒருவரிடம் வலுக்கட்டாயமாக ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, அஜித்குமாரை போலீசார் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.