ஊருக்குள் சுற்றும் ஒற்றை கொம்பு காட்டு யானை... பீதியில் மக்கள் - திக்குமுக்காடும் வனத்துறையினர்
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே 2வது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்... கீழ் முருங்கை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மாந்தோப்பில் நேற்று முழுவதும் முகாமிட்டிருந்த காட்டு யானையை வன அலுவலர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். யானை மாந்தோப்பில் இருந்து வெளியேறி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து மேல்பட்டி கிராமத்திற்குள் புகுந்து கொண்டது... வனத்துறையினர் தொடர்ந்து யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.. ஒற்றைக் கொம்புடன் சுற்றி வரும் இந்த ஒற்றைக் காட்டு யானையால் இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், இதற்கு பார்வை குறைபாடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.