தந்தை படும் கஷ்டத்தை சொன்ன இளைஞர்.... வீடு தேடி சென்று உதவிய நடிகர் பாலா.. நெஞ்சை நெகிழவைக்கும்
சமூக வலைதளம் மூலம் உதவி கோரிய இளைஞரின் வீட்டிற்கே சென்று நிதியுதவி செய்து, சின்னத்திரை நடிகர் பாலா நெகிழ செய்துள்ளார். இளைஞர் ஒருவர், விவசாயியான தந்தை மிகுந்த கஷ்டப்படுவதாகவும், தங்களுக்கு உதவ வேண்டுமெனவும், சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்ற பாலா, அக்குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மட்டுமின்றி, அந்த குடும்பமே நெகிழ்ந்துள்ளது.