கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி ..கணவன் செய்த கொடூர செயல் - வெளிய வந்த பகீர் பின்னணி

Update: 2023-10-26 13:46 GMT

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்பவர், சில தினங்களுக்கு முன் வெட்டி கொல்லப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் தங்களை வழி மறித்து வெட்டியதாக பிரவீனாவின் கணவர் ராஜ்குமார் கூறிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவரே ஆட்களை வைத்து மனைவியை கொன்றது தெரியவந்தது. ராஜ்குமாருக்கும் சுகன்யா என்ற பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான தகராறில், பிரவீனா ராஜ்குமாரை காலணியால் அடித்துள்ளார். அதேபோல், ராஜ்குமாரோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்த அவரது அண்ணன் மனைவி ஆனந்தியையும், பிரவீனா துடைப்பத்தால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரும் ஆனந்தியும் சேர்ந்து பிரவீனாவை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆனந்தியின் அக்கா மகன் தீபக்கும், அவரது நண்பர்களும் பிரவீனாவை வெட்டி கொன்றுள்ளனர். விசாரணையில் வெளியான தகவலையடுத்து ராஜ்குமார், ஆனந்தி, தீபக் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்