மதுரையில் தீபாவளி ஆரம்பிக்கும் முன்னே நடந்த விபரீதம்.. பெற்றோர்களே ஜாக்கிரதை
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரபு - நதியா தம்பதியின் 15 வயது மகன் தீபாவளியை முன்னிட்டு, ஆசை ஆசையாக பட்டாசு வாங்கி வந்துள்ளார். பட்டாசு வெடிக்கிறதா என சோதனை செய்வதற்காக ஒரு பட்டாசை வெடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கையில் இருந்தபடி பட்டாசு வெடித்தது. இதில் சிறுவனின் வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகி வலியில் அவர் துடிதுடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.