தொழிலாளியை அடித்து தூக்கிய டிராக்டர்..! மருத்துவமனையில் உறவினர்கள் தர்ணா போராட்டம்..
தாராபுரத்தை அடுத்த கரையூரைச் சேர்ந்த முருகன் என்பவர், அப்பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டருடன் மோதியதில் பலத்த காயமடைந்த முருகனை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, டிராக்டரை ஓட்டி வந்த பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி, முருகனின் மனைவி உள்பட அவருடைய உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், டிராக்டர் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் தலைமறைவாகி விட்டதால் அவரைத் தேடி வருவதாக கூறினர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது