எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம்
மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக 6 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இரண்டு படகுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரையும், மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனனர்.
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து 21 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்