இணையத்தில் வேகமாக பரவும் போஸ்டர்... அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்

Update: 2024-03-18 02:14 GMT

இணையத்தில் வேகமாக பரவும் போஸ்டர்... அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்

#tenkasi #bjp #poster #thanthitv

தென்காசி தொகுதியில் பாஜக சார்பில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுவதாக தாமரை சின்னத்தில், ஜான் பாண்டியன் வாக்கு கேட்பது போன்ற போஸ்டர்களும், அதேபோல் ஆனந்தன் என்பவரும், தாமரைச் சின்னத்தில் தென்காசி தொகுதியில் வாக்கு கேட்பது போன்ற போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒரே தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள், ஒரே கட்சியின் சார்பில் போட்டியிட போட்டிபோடுவது போன்ற போஸ்டர்கள், பரவி வருவது பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு, தற்போது வரை பாஜக சார்பிலும் கூட்டணி கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யவில்லை

Tags:    

மேலும் செய்திகள்