ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்ற ஊராட்சி தலைவி, காங். நிர்வாகி - தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் சீவநல்லூர் ஊராட்சி தலைவியும், காங்கிரஸ் நிர்வாகியும் தாக்கி கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையிலும் ஊராட்சி தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, காங்கிரஸ் நிர்வாகி கதிரவன் உண்ணாவிரதம் அறிவித்திருந்தார். இதை கைவிட வலியுறுத்தி நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கைகலப்பை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.