அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி
அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி - வெளியான சிசிடிவி காட்சிகள்
சிவகங்கை அருகே, கோயில் உண்டியல் எண்ணும் பணியின்போது, 10 சவரன் தங்க நகையை கோயில் உதவி ஆணையர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றபோது அந்த கோயிலின் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சுமார் 10 சவரன் தங்க நகையை திருடி, தனது பாக்கெட்டில் வைப்பது, சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது. கோயில் கட்டுப்பாட்டு அறை பாதுகாப்பு காவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.