பீரோ அடியில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு - பூஜை செய்து வழியனுப்பி வைத்த பொதுமக்கள்
கடலூர் அருகே பீரோவின் அடிப்பாகத்தில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து, பூஜை செய்து ஊர்மக்கள் வழியனுப்பி வைத்தனர். திருச்சோபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவரின் வீட்டின் பீரோவில் இரவு நேரத்தில் வந்ததை அடுத்து, பீரோவை சோதனை செய்ததில் அதன் அடிப்பாகத்தில் பாம்பு இருந்ததை கண்டறிந்தார். இதையடுத்து, வன ஆர்வலர் மூலம், பாம்பினை பிடித்து, அதற்கு பூஜை செய்து, வழி அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பாம்பினை வன ஆர்வலர் செல்லா, பாதுகாப்பாக காப்புக்காட்டுக்குள் எடுத்துச் சென்று விட்டார்.