தமிழகம் முழுக்க பேசப்பட்ட என்கவுன்ட்டர்.. களமிறங்கும் இரு மாநிலங்கள்
#namakkal #tamilnadu #tnpolice #thanthitv
கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த மேவாட் கொள்ளையர்களை விசாரிக்க கேரள மற்றும் ஆந்திர போலீசார் நாமக்கல் மாவட்டம் வெப்படை வந்துள்ளனர்...
திருச்சூரில் ATM மையங்களில் கொள்ளையடித்து வந்த பணத்துடன் நாமக்கல் வழியாக தப்ப முயன்ற மேவாட் கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் துரத்திப் பிடித்தனர்...
ஏழு பேரில் ஒரு கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் காலில் குண்டடி பட்டு கால் அகற்றப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருச்சூர் கிழக்கு போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுக்க தமிழகம் வந்துள்ளனர். நாளை காலை 10 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றவாளிகளை கஸ்டடி எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை கேரள போலீசார் பெறவுள்ளனர். மேலும், ஆந்திர ஏடிஎம்களில் கொள்ளையடித்தது தொடர்பாக விசாரிக்க ஆந்திர மாநில காவல் துறையைச் சேர்ந்த எஸ்ஐ கிருஷ்ணா ராவ் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்...
குற்ற சம்பவம் குறித்து குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக அவர் வந்துள்ளதாகவும், கேரள போலீசார் கஸ்டடி எடுத்த பிறகு குற்றவாளிகளை ஆந்திர போலீசார் கஸ்டடி எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.